சின்னசேலத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி


சின்னசேலத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Sept 2021 10:07 PM IST (Updated: 23 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி

சின்னசேலம்

சின்னசேலம் தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதை சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதைத் தொடர்ந்து முன்னணி தீயணைப்பு வீரர்கள் ராமச்சந்திரன், ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் மழை, வெள்ளம், கட்டிட இடிபாடுகள், தீ விபத்து, மின்சாரம் மற்றும் சமையல் கியாஸ் தீ விபத்துகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்த்தி காட்டினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story