தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Sept 2021 11:17 PM IST (Updated: 23 Sept 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை திட்டியதால் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

நாகப்பட்டினம்:
மனைவியை திட்டியதால் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வெட்டிக்கொலை
மயிலாடுதுறை அருகே மாப்படுகை கவரைத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 29). இவருடைய மனைவி தீபா. அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன்(30). கூலி தொழிலாளி. கடந்த 2016&ம் ஆண்டு மே மாதம் 21&ந் தேதி குமாரின் மனைவி தீபாவை, சரவணன் தரக்குறைவாக திட்டியுள்ளார். 
இதுகுறித்து குமார், மயிலாடுதுறை காவிரி ஆற்றுப்பாலம் அருகே நின்று கொண்டிருந்த சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரவணனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிங்ஸ்லி ஜெரால்டு நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அவர், சரவணனை அரிவாளால் வெட்டிக்கொன்ற குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். 
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் குமார், கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story