தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Sept 2021 11:37 PM IST (Updated: 23 Sept 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி:
அகற்றப்பட்ட கருவேல மரங்கள்
வேதா-ரண்-யம் அருகே உள்ள தோப்-புத்-து-றை-யில் இருந்து பனை-யன்காடு செல்-லும் சாலை-யோ-ரத்-தில் அதிக அள-வில் கரு-வே-ல-ம-ரங்கள் வளர்ந்-தி-ருந்-தன. இத-னால் இந்த சாலை-யில் செல்-லும் வாகன ஓட்-டி-கள் அவ-திப்-பட்டு வந்-த-னர். போக்கு-வ-ரத்-துக்கு இடை-யூ-றாக உள்ள கரு-வேல மரங்களை அகற்ற வேண்-டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று படத்-து-டன் செய்தி வெளி-யா-னது. இதன் எதி-ரொ-லி-யாக நக-ராட்சி 
நிர்-வா-கம் உடனடி-யாக கரு-வேல மரங்களை அகற்-றி-னர். உடன் நட-வ-டிக்கை எடுத்த நக-ராட்சி அதி-கா-ரி-களுக்கும், செய்தி வெளி-யிட்ட தினத்தந்தி நாளி-த-ழுக்கும் நன்றி 
தெரி-வித்-து-கொள்-கி-றோம்.
                            பொது-மக்கள், தோப்-புத்-துறை.
குண்டும்&குழியுமான சாலை
திரு-வா-ரூ-ரில் இருந்து கொடிக்கால்-பா-ளை-யம், கேக்கரை, பள்-ளி-வா-ர-மங்க-ளம், பல-ய-வ-ளம் மற்-றும் ஓடாச்-சே-ரியை இணைக்கும் பிர-தான சாலை-யாக விளங்-கும் ராம்கே சாலை குண்-டும், குழி-யு-மாக காட்சி அளிக்கி-றது. இந்த சாலை-யில் பள்ளி மற்-றும் கல்-லூரி செல்-லும் மாண-வி-கள், வேலை-களுக்கு செல்-வோர் வாக-னங்க-ளில் செல்-லும் போது மிகுந்த சிர-மத்-திற்கு உள்-ளா-கி-றார்கள். எனவே பொது-மக்கள் நலன்க-ருதி சம்-பந்-தப்-பட்ட துறை அதி-கா-ரி-கள் குண்-டும், குழி-யு-மாக காணப்-ப-டும் பிர-தான சாலையை சீர-மைக்க வேண்-டும்.
             முகமதுகடாபி, கொடிக்கால்பாளையம்.
அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களுக்கு தடை விதிக்கப்படுமா?
திரு-வா-ரூர் மாவட்-டம் திருத்-து-றைப்-பூண்டி சுற்-று-வட்-டார பகு-தி-களில் விவ-சாய பணி-கள் மும்-மு-ர-மாக நடை-பெற்று வரு-கி-றது. இத-னால் விவ-சா-யி-களும், பொது-மக்க-ளும் அதிக அள-வில் திருத்-து-றைப்-பூண்டி நகர் பகு-திக்கு வந்து செல்-கி-றார்கள். நக-ரத்-திற்-குள் வரும் கன-ரக வாக-னங்கள் அதி-வே-க-மா-க-வும், அதிக சத்-தம் கொடுக்கக்கூ-டிய ஒலிப்-பான்களை ஒலிக்க செய்-வ-தால் பொது-மக்கள் அச்-சத்-து-டன் சென்று வரு-கி-றார்கள். மேலும் சிறு, சிறு விபத்-துக்க-ளும் நடை-பெ-று-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள், அதிக சத்-தம் எழுப்-பும் காற்று ஒலிப்-பான்க-ளுக்கு தடை-வி-தித்து, அதனை பயன்-ப-டுத்-தும் வாகன ஓட்-டி-கள் மீது நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
                            பொது-மக்கள், திருத்துறைப்பூண்டி. 
போக்குவரத்து வசதி வேண்டும்
திரு-வா-ரூர் மாவட்-டம், தப்-ப-ளாம் புலி-யூர் வட்-டம், வாஞ்-சூர் கிரா-மத்-தில் வசித்து வரு-கி-றோம். எங்-கள் ஊரில் எந்த போக்கு-வ-ரத்து வச-தி-யும் இல்-லா-த-தால் பள்ளி மாண-வர்கள் மற்-றும் பொது-மக்கள் அவ-சர வேலை-யாக செல்ல  வேண்-டு-மா-னால் பஸ் வசதி இன்றி தவித்து வரு-கி-றோம். எங்கு செல்ல வேண்-டு-மா-னா-லும் நடந்-தும், இரு சக்கர வாக-னங்க-ளில் தான் செல்ல வேண்-டும். எனவே பொது-மக்கள் மற்-றும் மாணவ&மாண-வி-களின் நலன் கருதி சம்-பந்-தப்-பட்-ட-வர்கள் போக்கு-வ-ரத்து வசதி செய்து தர வேண்-டும்.
                            அ.ஐஸ்வர்யா, வாஞ்சூர்.
அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டும்
நாகப்-பட்-டி-னம் மாவட்-டம் திருக்கு-வளை தாலுகா வடு-கூர் ஊராட்சி தென்-பாதி பகு-தி-யில் அங்-கன்-வாடி மையம் இயங்கி வரு-கி-றது. இந்த மையத்-தில் மின்-வ-சதி, கழி-வறை வசதி ஆகிய அடிப்-படை வச-தி-கள் இன்-றி-யும், சுற்-றுச்-சு-வர் இடிந்-தும் காணப்-ப-டு-கி-றது. இந்த கட்-டி-டத்தை சுற்றி செடி, கொடி-கள் மண்டி புதர்-போல் காட்சி அளிக்கி-றது. இத-னால் விஷ ஜந்-து-கள் உள்ளே புகும் அபா-யம் உள்-ள-தால் இங்கு குழந்-தை-களை அனுப்-பவே பெற்-றோர் அச்-சப்-ப-டு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள், அங்-கன்-வாடி மையத்-திற்கு அடிப்-படை வச-தி-கள் செய்து கொடுக்க வேண்-டும். மேலும் அதை சுற்-றி-யுள்ள செடி, கொடி-களை அகற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும். 
                 வடுகூர் தென்பாதி கிராம மக்கள்.

Next Story