தகராறில் தொழிலாளி குத்திக்கொலை
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி,
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கூலி வேலை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வி. மங்கலம் ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் அருகில் குடியிருப்பவர் சின்னகருப்பன் மகன் மருதுபாண்டி (வயது 45). இவர் கூலி வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு பொன்னழகு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மருதுபாண்டி மற்றும் அவர் வீடு அருகில் குடியிருக்கும் அவரது உறவினரான செல்வசேகரன் என்பவருடன் நேற்றுகாலை சிவன்கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மற்றொரு உறவினரான லோகநாதன் (30) என்பவரது வீட்டில் அமர்ந்து மருதுபாண்டி, லோகநாதன் மற்றும் செல்வசேகரன் ஆகியோர் மது அருந்தி உள்ளனர்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து மருதுபாண்டி கத்தியால் வயிற்றில் குத்துப்பட்டு குடல் சரிந்து கழுத்தில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். அந்தவழியில் சென்றவர்கள் மருதுபாண்டி பிணமாக கிடந்ததைக் கண்டு எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
விசாரணை
தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சீராளன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸ் துணைசூப்பிரண்டு ஆத்மநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் பிணமாக கிடந்த மருதுபாண்டி உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக மருதுபாண்டியுடன் மது அருந்திய லோகநாதன் மற்றும் செல்வசேகரன் ஆகியோரை எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story