மாவட்ட செய்திகள்

கரூர் கடைவீதியில்குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல் + "||" + Villagers block the road with barracks asking for drinking water

கரூர் கடைவீதியில்குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்

கரூர் கடைவீதியில்குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் ஊராட்சியில் திருவாந்தவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடி தண்ணீர் வருவதில்லை. மேலும் 5 ஆண்டுகளாக குடிதண்ணீர் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகின்றோம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் கரூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இன்னும் இரண்டு தினங்களில் எங்களுக்கு குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கி முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
கூட்டுறவு வங்கி முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் 2 வது நாளாக மறியல்
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 2 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து அந்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்
4. திருமயம் அருகே பாறைக்கு வெடி வைத்து உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் மறியல்
திருமயம் அருகே பாறைக்கு வெடி வைத்து உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.