தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உளுத்திமடை, என்.முக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்கள் இறந்துவிட்டதால் தற்போது 9 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், உளுத்திமடை, என்.முக்குளம் ஆகிய ஊராட்சி மன்ற தலைவருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 ஊராட்சிகளிலும் உதவி தேர்தல் அலுவலர் நேரு ஹரிதாசிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 2 ஊராட்சிகளிலும் தேர்தல் நடைபெறுவதால் திருச்சுழி துணை தாசில்தார் சிவனாண்டி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தீவிர வாகன சோதனை
இந்த பறக்கும் படை அலுவலர்கள் நரிக்குடி பகுதிக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். இந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு 4 சக்கர வாகனம் கொடுக்கப்படாததால் இவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று சோதனை செய்து வருகின்றனர். 2 ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வண்ணம் தேர்தல் பறக்கும் படையினர் ஊராட்சிக்கு செல்லக்கூடிய பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அல்லது பரிசு பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story