பஸ்சில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை அபேஸ்


பஸ்சில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 24 Sept 2021 1:39 AM IST (Updated: 24 Sept 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது

திருச்சி
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வீரமாதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மனைவி ஜான்சிராணி (வயது 34). திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி வீட்டுக்கு சென்றார். அப்போது தனது கைப்பையில் 7 பவுன் நகையை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்று பார்த்தபோது கைப்பையை காணவில்லை. அவர் பஸ்சில் வந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் நகை இருந்த கைப்பையை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story