திண்டுக்கல்லில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு


திண்டுக்கல்லில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Sept 2021 2:47 AM IST (Updated: 24 Sept 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 75 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் பதற்றமான 18 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. 

மேலும் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலுக்கு தனித்தனி வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடித்தல், 3 விதமான வாக்குப்பெட்டிகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட, தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். 

இதையடுத்து திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
அப்போது வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். உள்ளாட்சி இடைத்தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி பார்வையாளர் அறிவுரை வழங்கினார். 

Next Story