நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,204 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,204 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2021 2:56 AM IST (Updated: 24 Sept 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,204 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50,204 ஆக அதிகரித்து உள்ளது.
52 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 50 ஆயிரத்து 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50,152 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 204 ஆக அதிகரித்து உள்ளது.
529 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 56 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இந்த மாவட்டத்தில் இதுவரை 49 ஆயிரத்து 193 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 482 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 529 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3&வது அலையை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
===

Next Story