மீன்பிடித்த தொழிலாளி கால்வாயில் தவறி விழுந்து பலி


மீன்பிடித்த தொழிலாளி கால்வாயில் தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 24 Sept 2021 2:56 AM IST (Updated: 24 Sept 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடித்த தொழிலாளி கால்வாயில் தவறி விழுந்து பலி

குடியாத்தம்

குடியாத்தம் பகுதியில் கடந்தசில நாட்களாக பெய்த மழைகாரணமாக பள்ளிகொண்டா பாலாற்றில் தண்ணீர் செல்கிறது. பாலாற்றில் இருந்து காவனூர் ஏரிக்கு கால்வாய் வழியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. குடியாத்தத்தை அடுத்த ஹைதர்புரம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தொழிலாளி கார்த்திகேயன் (வயது 47) என்பவர் நேற்று காலையில் தனது வீட்டின் அருகே செல்லும் காவனூர் ஏரி கால்வாய் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தவறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரி கால்வாய் தண்ணீரில் இறங்கி கார்த்திகேயனை சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story