இன்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை
ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலுக்கு ஆயத்தமாக இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. எனவே அவர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பதால் பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கபீர் தெரிவித்து உள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுறது.
Related Tags :
Next Story