வியாசர்பாடியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா


வியாசர்பாடியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Sept 2021 5:05 PM IST (Updated: 24 Sept 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர் 19-வது தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகள் 40 பேருக்கு சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியானது. அதில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனடியாக அந்த மாணவரை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அந்த வகுப்பு ஆசிரியர்கள் 3 பேர் மற்றும் மாணவருடன் நெருங்கி பழகிய சக மாணவர்கள் 5 பேருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தனியார் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவர் படித்து வந்த அந்த ஒரு வகுப்பறை மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Next Story