தேனாம்பேட்டையில் கல்லால் தாக்கி கட்டிட தொழிலாளி படுகொலை - நண்பர்கள் 2 பேர் கைது
தேனாம்பேட்டையில் கல்லால் தாக்கி கட்டிட தொழிலாளி படுகொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை, தியாகராய சாலையில் பிளாட்பாரத்தில் வசிப்பவர் வெற்றிவேல் (வயது 41). மனைவியை பிரிந்து இவர் வாழ்ந்து வந்தார். கட்டிட வேலை செய்து வந்தார். சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, அருணகிரி சத்திரம் பகுதியைச்சேர்ந்த சங்கர் (45), ரகு (40) ஆகிய இருவரும், வெற்றிவேலை அணுகி, தங்களையும் கட்டிட வேலையில் சேர்த்து விடும்படி கேட்டனர். அதன்படி அவர்கள் இருவரையும், தான் வேலை செய்யும் இடத்தில் கட்டிட பணிக்கு, வெற்றிவேல் சேர்த்து விட்டார். 3 பேரும் நண்பர்களாக பழகினார்கள். ஒன்றாக வேலை செய்தார்கள். வெற்றிவேல் தங்கும் பிளாட்பாரத்திலேயே சங்கரும், ரகுவும் தங்கினார்கள். கடந்த 21-ந்தேதி அன்று இரவு சம்பளம் தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. சங்கரும், ரகுவும் சேர்ந்து கல்லால் அடித்து, வெற்றிவேலை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்த வெற்றிவேல், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகள் சங்கரும், ரகுவும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story