தமிழகத்துக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் வந்தன
புனேவில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் 7 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தன.
ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளதால் கடந்த 2 வாரங்களாக சிறப்பு மெகா முகாம் நடத்தப்பட்டது. இதனால் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 4 கோடியே 25 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் 7 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தன.
தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story