தேர்தல் பயிற்சி முகாம்
பரமக்குடியில் தேர்தல் பயிற்சி முகாம் நடந்தது.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஒன்றிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 9&ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் 33 வாக்குச்சாவடிகளுக்கு பணியாற்றும் 111 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் பயிற்சி அளித்தனர். சத்திரக்குடி ஒட்டமடம் காளியம்மன் கோவில் சமுதாயக் கூடத்தில் 88 வாக்குச்சாவடிகளுக்கான 264 பேர் கலந்துகொண்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரபிரசாத், துணை அலுவலர் பழனி, மாவட்ட ஊராட்சி செயலாளர் ரகுவீர கணபதி, போகலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story