தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் நேற்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வ.உ.சி மார்க்கெட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன், த.மா.கா. மாவட்ட தலைவர் கதிர்வேல், வக்கீல் சொக்கலிங்கம், பா.ஜனதா கட்சி நிர்வாகி பொன்குமரன், தொழில் அதிபர்கள் தனபால், அன்னை ஜூவல்லர்ஸ் விநாயகமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சார்பில் வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஐசன்சில்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க, ச.ம.க.
அ.ம.மு.க சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் பிரைட்டன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முககுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாடார் மகாஜன சங்கம்
நாடார் மகாஜன சங்கம் சார்பில் நாடார் மகாஜன சங்கத் துணைத் தலைவர் சதீஷ் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் விஜய், விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுபோல் அகில இந்திய காமராஜ் மக்கள் கழகம் சார்பில் அதன் தலைவர் விஜயகுமார் நிர்வாகிகள் மூவேந்தன் ராஜா, சங்கர், அபிஷேக், வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மரகதம், உத்திரபாண்டி, கதிரேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
விழாவிற்கான ஏற்பாடுகளை தட்சணமாற நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் ஜெயக்கொடி தலைமையில் சீனிவாசன், தமிழ்ச்செல்வன், லிங்க செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சன்னதி தெரு முகப்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஜெயராஜ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராஜபாண்டி, வக்கீல் சந்திரசேகரன், ஒன்றிய அமைப்பாளர் சண்முகவேல், நற்பணி மன்ற ஆயுட்கால உறுப்பினர் ராஜேஷ்குமார், பாலகுமார், அம்பி கண்ணன், காமராஜ், அஜித்குமார், சேகர், குமார், முருகன், மகாராசன், கார்த்திக், செல்வம், செல்வகுமார், டி.முருகன், பால்வண்ணன், இசக்கிபாண்டி, சுந்தரராஜ், மீனாட்சி சுந்தரம், மோகன், லட்சுமணன், காளிமுத்து, செல்வசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அரசு பொது நூலகத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு நூலக புரவலர் வி.பி.ராமநாதன் ஒரு பெண்ணுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கினார். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் 100 ஏழை மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி நூலகத்தில் உறுப்பினராக இணைத்தார். நூலகர்கள் சுப்பிரமணியன், சுடலைகண்ணு மற்றும் வக்கீல் சாத்ராக், வேல்ராமகிருஷ்ணன், வீரமணி, அமிர்தலிங்கம், காளிமுத்து, ரவி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நல் நூலகர் மாதவன் செய்திருந்தார்.
காயாமொழி
காயாமொழியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காயாமொழி நற்பணி மன்ற தலைவர் முருகன் ஆதித்தன், பொருளாளர் ராஜேந்திர ஆதித்தன், செயலாளர் மொகதும் முகமது, பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணி ஆதித்தன், வரதராஜ ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயாமொழி குமாரசாமிபுரத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன், கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், நாராயணன், செல்வம், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காயாமொழி ஸ்ரீ முப்புராதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது.
திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சோடா ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர் சாந்தகுமார், நகர துணை செயலாளர் பால்ராஜ், ஆதிமூலம், கிருஷ்ணன், சாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்
சாயர்புரம் மெயின் பஜாரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பொ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story