கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
தேடுதல் வேட்டை
தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், ரவுடித்தனம் செய்யும் நபர்களை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலைய எல்லைகளில் உள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தேடப்பட்டனர்.
80 பேர் கைது
இதில் வழக்குகளில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்கள், குற்ற பின்னணி கொண்டவர்கள், ரவுடிகள் என மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story