சிங்கம்புணரியில், வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


சிங்கம்புணரியில், வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 24 Sept 2021 10:54 PM IST (Updated: 24 Sept 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில், வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி போலீஸ் நிலையம் எதிரே முத்துவடுகநாதர் சுவாமி தெரு பகுதியை சேர்ந்தவர் காதர்மைதீன். இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் வேலைக்கார பெண் மட்டும் இருந்து உள்ளார். இந்த நிலையில் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாக பாம்பு புகுந்து உள்ளது. இதை பார்த்த அவர் அலறினார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த லோகேஷ் என்ன என்று விசாரித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Next Story