கல்வராயன்மலையில் 1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை முண்டியூர் கிராம ஓடையில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறலை பதப்படுத்தி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் முண்டியூர் கிராம ஓடையில் சோதனை நடத்தியபோது அங்கே பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக 1,400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். பின்னர் இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சின்னையன் மகன் சீனிவாசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்
Related Tags :
Next Story