தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Sept 2021 11:59 PM IST (Updated: 24 Sept 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

தெரு விளக்குகள் மாற்றப்பட்டது
கல்லுக்கூட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வலிய மார்த்தாண்டன்விளை பகுதியில் உள்ள 9 மற்றும் 10 ஆகிய மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் இருந்தன. இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில்  வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக செய்தி வெளியிடப்பட்ட அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை அமைத்தனர். சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.  
குப்பைகளால் நிரம்பிய மறுகால் ஓடை
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகவதிபுரம் கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பி அந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் மறுகால் ஓடையும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த மறுகால் ஓடையில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் மழைநீர் ஓடைக்கு செல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுகால் ஓடையில் குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.
                     -முத்துவேல் பாண்டியன், வடக்கு பகவதிபுரம்.
பாலம் சீரமைக்கப்படுமா?
குளச்சல் நகராட்சியையும் ரீத்தாபுரம் பேரூராட்சியையும் இணைக்கும் பாம்பூரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்காலின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாலம் சீரமைக்கப்படுமா?.
                                                                                 -ரவி, ரீத்தாபுரம்.
எரியாத மின்விளக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரலூர் பகுதியில் உள்ள219, 221 ஆகிய மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                 -அசோக்குமார், சரலூர்.
விபத்து அபாயம்
சித்திரங்கோடு-தடிக்காரன்கோணம் சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. ஆனால், சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்கவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும். 
                                                                       -ஜெயராஜ், குழிக்கோடு.
சுகாதார சீர்கேடு 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளையில் பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அம்மன் குண்டு குளம் இருந்தது. தற்போது இந்த குளம் பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து அதற்கான அடையாளமே இல்லாமல் காணப்படுகிறது. மேலும், குளத்தின்  அருகில் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அங்கு வந்து கொட்டுகின்றனர். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதுடன் குளத்தையும் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                               -பிரபானந்து, பெருவிளை.
நடவடிக்கை எடுக்கப்படுமா?.
கோட்டார் வட்டவிளை சானல்கரை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை நேரங்களில் அந்த வழியாக வரும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
                                                     -வினோத் குமரப்பா, வட்டவிளை.



Next Story