தூக்கில் பிணமாக தொங்கிய அடகுகடை அதிபர்


தூக்கில் பிணமாக தொங்கிய அடகுகடை அதிபர்
x
தினத்தந்தி 25 Sept 2021 12:15 AM IST (Updated: 25 Sept 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே தூக்கில் அடகு கடை அதிபர் பிணமாக தொங்கினார்.

தேவகோட்டை,

காரைக்குடி சுப்பிரமணியபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (வயது 47). இவர் காரைக்குடியில் அடகு கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 22&ந் தேதி வீட்டில் இருந்து சென்றவர் அதன்பிறகு காணவில்லை.இது குறித்து அவரது குடும்பத்தினர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த நிலையில் நேற்று தேவகோட்டை அருகில் உள்ள பரியன் வயல் பகுதியில் உள்ள ஒரு பழைய ஓட்டு கொட்டகையில் தம்பிதுரை தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அருகில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது. இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பிதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தம்பிதுரை எப்படி இறந்தார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story