திருவலம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவலம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Sept 2021 12:23 AM IST (Updated: 25 Sept 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸ்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவலம்

திருவலம் அருகே தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸ்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, எரும்பி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவர் வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் (பட்டாலியன்) போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அங்குள்ள குடியிருப்பில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அஜித்குமார் அங்குள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை குடியிருப்பில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை அவர் காவலர் பயிற்சி மைதானத்திற்கு வராததால், உடன் பணியாற்றும் போலீசார் அஜித்குமார் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

உடனடியாக இது குறித்து சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் முத்து செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்குமார் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேவூர் சிறப்பு காவல் படை குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story