தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 25 Sept 2021 12:37 AM IST (Updated: 25 Sept 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி 
திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி 19வது வார்டு மாரியம்மன் கோவில் அருகில் எரியாத மின்விளக்குகள் என்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் மின் வாரிய அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து புதிய மின் விளக்கு அமைத்துத்தந்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளும், தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்தனர். 
பொதுமக்கள், திருச்சி. 

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு தெற்கு கடைவீதி பகுதியில் ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து விபத்துக்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை. 

பொதுகழிப்பறை இன்றி பெண்கள் கடும் அவதி 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் பொதுகழிப்பறை இல்லாததால் அப்பகுதியில் உள்ள பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுகழிப்பறை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 
ப.ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான தார்ச்சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாணவநல்லூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை பழுதடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜலிங்கம்,  மாணவநல்லூர், புதுக்கோட்டை.

குண்டும், குழியுமான தார்ச்சாலை 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நங்கவரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட 12வது வார்டு நச்சலூர்-புரசம்பட்டி காலனி வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகிறது. மேலும் மழை பெய்யும்போது, சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சரவணன், மேலப்பட்டி, கரூர். 

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம் ஜானகி நகரில் ஏராளமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், அத்தியாவசிய தேவைக்கும் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பார்வதி , ஜானகி நகர், புதுக்கோட்டை.

விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் மின்கம்பம் 
கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் தென்னிலை தென் பாகம் நத்தமேடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக அப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆனதால்  மின் கம்பம் சேதம் அடைந்து கான்கிரீட் பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.  பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைத்து அப்பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். 
பொதுமக்கள், நத்தமேடு, கரூர்.

5 ரூபாய் மினரல் வாட்டர் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? 
பெரம்பலூர் மாவட்டம்  சிறுவாச்சூர் ஊராட்சியில் உள்ள ஐந்து ரூபாய் மினரல்  தண்ணீர் வழங்கும் நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நிலையத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்த நிலையம் செயல்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதிமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சிறுவாச்சூர், பெரம்பலூர்.

குழாயின் வால்வு தொட்டி மூடப்படுமா? 
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம்,  மேலமைலாடி கிராமத்தில் குளித்தலை- மணப்பாறை சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் குழாயின் வால்வு தொட்டி மூடப்படாமல் உள்ளது. மேலும் அதில் குடிநீர் வெளியே தேங்கி நிற்கிது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதீயில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் தொட்டி திறந்து உள்ளதால் இதில் கால்நடைகள் விழுந்து உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 தினேஷ் குமார்,  மேலமைலாடி, கரூர். 

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் 
அரியலூர் மாவட்டம் ஆண்டிபட்ட காடு ஊராட்சியில் மக்கள் பயன்படுத்தும் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து கிடக்கின்றன. இதனால் அந்த குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி மீன்கள் இறப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை தடுக்க வேண்டும். 
பொதுமக்கள், ஆண்டிபட்ட காடு, அரியலூர்.  

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழய அரசமங்கலத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான தார்ச்சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தராமல் உள்ளனர். இதனால் மழை பெய்யும்போது சேறும், சகதியுமான மண் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சேற்றில் பொதுமக்கள் நடக்கும்போது, அவர்களது கால்களில் சேற்றுப்புண் வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அரசமங்கலம், பெரம்பலூர். 

மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த கரையான்குறிச்சி கிராமத்தில் உள்ள  கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நவீன் குமார், கரையான்குறிச்சி, அரியலூர். 

குண்டும், குழியுமான தார்ச்சாலை
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நெய்வேலி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் 15 வருடங்களுக்கு முன்பாக தார் சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.  இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகிறது. மேலும் மழை பெய்யும்போது, சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். 
சூர்யா, நெய்வேலி, திருச்சி. 

பஸ் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தல் 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திரணிப்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியூர் செல்ல வேண்டுமானால் சாலையோரத்தில் நின்று பஸ் ஏறி செல்ல வெண்டி உள்ளது. மேலும் அப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்பட்டு தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திரணிப்பாளையத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். 
பொதுமக்கள், திரணிப்பாளையம், திருச்சி. 

அப்புறப்படுத்தப்படாத மண்ணால் துர்நாற்றம் 
திருச்சி 40 வது வார்டு எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து புதைந்திருந்த மண்களை அகற்றி அருகே வைத்துள்ளனர்.  ஆனால் அந்த மண் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலில் இருந்து அள்ளப்பட்ட மண்களை அப்புறப்படுத்த வேண்டும். 
பொதுமக்கள், எடமலைப்பட்டி புதூர், திருச்சி. 

செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையத்தால் நோயாகள் அவதி 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்காக அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி செயல்படாமல் உள்ளது.  இதனால் இப்பகுதி நோயாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செயல்படாமல் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 
பாலகிருஷ்ணன், அய்யம்பாளையம், திருச்சி. 

பாலத்தின் பக்கவாட்டில் சுவர் அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஏவூர் ஊராட்சியை சேர்ந்த கருப்பம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். துவக்க பள்ளிக்கும், நடுநிலை பள்ளிக்கும் இடையில் மிகவும் குறுகிய வளைவான சாலையில் புதுவாய்க்கால் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயானது சாலை மட்டத்திலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் பாசனத்திற்காக செல்கிறது. இந்த புதுவாய்க்கால் பாலத்தை கடந்து தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த வாய்க்கால் பாலமானது சாலை மட்டத்திலிருந்து மேலே பக்கவாட்டு சுவர் இல்லாமல் உள்ளது. இந்த கால்வாயில் தற்போது பாசன நீர் சென்று கொண்டிருப்பதால் பள்ளி குழந்தைகள் ஆபத்தை உணராமல் வாய்க்காலை எட்டிப்பார்த்து வாய்க்காலில் தவறி விழும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தின் பக்கவாட்டில் சுவர் அமைக்க வேண்டும். 
சசிகுமார்,  கருப்பம்பட்டி, திருச்சி.

சேறும் சகதியுமான மண் சாலை 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள பங்காரு அடிகளார் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் போக்குவரத்து தேவைக்காக அப்பகுதியில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையில் இந்த சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும்போது சேற்றுப்புண் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், பங்காரு அடிகளார் நகர், திருச்சி. 


Next Story