இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை
நாகர்கோவிலில் தாயார் கண்டித்ததால் இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தாயார் கண்டித்ததால் இளம்பெண் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திராவகம் குடித்த இளம்பெண்
நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய மகள் அஜிதா (வயது 21), திருமணம் ஆகவில்லை. இவர் கம்பளம் பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அவரது தாயார் அஜிதாவிடம் விசாரித்தார். அப்போது அஜிதா, தனது தோழியின் வீட்டிற்கு சென்றதால் தாமதமானதாக கூறியுள்ளார். அதற்கு அஜிதாவை அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அஜிதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது, அஜிதா கழிவறையில் இருந்த திராவகத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
அங்கு அஜிதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அஜிதா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் நேற்று ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story