சாலை அமைக்கும் பணி தீவிரம்


சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Sept 2021 1:53 AM IST (Updated: 25 Sept 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியம் சல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த இறவார்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் வெளியேற முடியாமலும், கழிவுநீர் தேங்கி நின்றதாலும் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். எனவே தார்ச்சாலை அமைக்கும் படி பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Related Tags :
Next Story