தேசிய கல்வி கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என்று சொல்வதில் தவறு இல்லை
தேசிய கல்வி கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என்று சொல்வதில் தவறு இல்லை என்று முதல்&மந்திரி பசவராஜ் பொம்மை சட்டசபையில் கூறினார்.
பெங்களூரு: தேசிய கல்வி கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என்று சொல்வதில் தவறு இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சட்டசபையில் கூறினார்.
தேசிய கல்வி கொள்கை
கர்நாடக சட்டசபையில் நேற்று தேசிய கல்வி கொள்கையை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது முதல்&மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
நாடு, தேசியம், ஆர்.எஸ்.எஸ். மூன்றும் ஒன்றே. ஆர்.எஸ்.எஸ். என்றால் தேசியவாதம் என்று பொருள். அதனால் தேசிய கல்வி கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என்று சொல்வதில் தவறு இல்லை. நாட்டிற்கும், மாணவர்களுக்கும் எது நல்லது என்பது முக்கியம். 21&வது நூற்றாண்டுக்கு குழந்தைகளை தயார்படுத்துவது தான் இந்த கொள்கையின் நோக்கம். இது உலக தரத்திற்கு குழந்தைகளை தயார்படுத்தும்.
தீங்கு விளைவிக்க கூடியது
ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட கல்வி முறை நாட்டிற்கு தேவை இல்லை. தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, நமது நாட்டிற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. அது நமது மாணவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சித்தராமையா, “இது ஹிட்லர் ஆட்சியை போல் செயல்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ். கல்வி கொள்கை“ என்றார். அப்போது பேசிய பசவராஜ் பொம்மை, “இதை ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்று அழைக்கட்டும். இதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் அவ்வாறு அழைப்பதை ஏற்று கொள்கிறோம். இந்த கல்வி கொள்கை குறித்து 3 ஆண்டுகள் விவாதிக்கப்பட்டன. இது மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். காங்கிரசார் வெளிநாட்டு கல்வி கொள்கையை விரும்புகிறார்கள். ஏனென்றால் காங்கிரசார் வெளிநாட்டினர்“ என்றார்.
Related Tags :
Next Story