வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
செங்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார்.
செங்கோட்டை:
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6, 9-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 12-ந்தேதி நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 யூனியன்களில் ஒன்றான செங்கோட்டை யூனியனில் உள்ள செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story