2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Sept 2021 3:29 AM IST (Updated: 25 Sept 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் சென்னல்பட்டியை மகேஷ் சண்முகம் (வயது 29), நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த பேராச்சி செல்வம் (25) . இவர்கள் மீது பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் ஏற்று மகேஷ் சண்முகம், பேராச்சி செல்வம் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் முருகன் வழங்கினார்.



Next Story