உள்ளாட்சி தேர்தலில் 142 வேட்பாளர்கள் போட்டி: ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 மனுக்கள் நிராகரிப்பு

உள்ளாட்சி தேர்தலில் 142 வேட்பாளர்கள் போட்டி: ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 மனுக்கள் நிராகரிப்பு
x
தினத்தந்தி 25 Sept 2021 2:49 PM IST (Updated: 25 Sept 2021 2:49 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு பெறப்பட்ட 79 வேட்பு மனுக்களில் 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருவள்ளூர்,

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இறப்பு, ராஜினாமா செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டத்தில் 38 பதவிக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. 

இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 43 வேட்பு மனுக்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 வேட்பு மனுக்களும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 79 வேட்புமனுக்களும் என மொத்தம் 144 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. 

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு பெறப்பட்ட 79 வேட்பு மனுக்களில் 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Next Story