கல்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


கல்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 25 Sept 2021 4:34 PM IST (Updated: 25 Sept 2021 4:34 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் லீமாரோஸ் (வயது 50). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். லீமாரோஸ் கடந்த 19-ந்தேதி தனது மகளுடன் இருசக்கர வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்து கல்பாக்கம் அணுசக்தித்துறை மருத்துவமனை அருகில் வேகத்தடையை கடந்த போது, எதிர்பாராதவிதமாக லீமாரோஸ் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story