நீடாமங்கலம் அருகே, பாரம்பரிய இயற்கை நெல் திருவிழா - பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


நீடாமங்கலம் அருகே, பாரம்பரிய இயற்கை நெல் திருவிழா - பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sept 2021 6:35 PM IST (Updated: 25 Sept 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் கிராமத்தில் பாரம்பரிய இயற்கை நெல் திருவிழாவை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் கிராமத்தில் விவசாயி செந்தில் உமையரசி, 4 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய இயற்கை விவசாய பணியை தொடங்கினார். நெல் திருவிழாவை முன்னிட்டு ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் நினைவாக மருத்துவ குணமுடைய கருப்பு கவுனி நெல் நாற்றை பெண் பணியாளர்கள் மற்றும் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து நட்டனர். இந்த பணியை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதில் திருவாரூர் வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட நபார்டு வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த் கண்ணா, நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குனர் சாருமதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்பட முன்னோடி விவசாயிகள், பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story