உப்புக்கோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணி ஒத்திகை
உப்புக்கோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணி ஒத்திகை நடந்தது.
உப்புக்கோட்டை:
வடகிழக்கு பருவமழையையொட்டி உப்புக்கோட்டையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் போடி தீயணைப்பு துறை சார்பில் நேற்று மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதற்கு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் வெள்ளம் வரும் காலங்களில் எவ்வாறு மக்களை காப்பது, நீச்சல் தெரியாதவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.
மேலும் வாழைமரம், லைப் ஜாக்கெட், லாரி டியூப், காலிபாட்டில்கள், காலிகுடம், காலி கியாஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து போன்றவற்றை பயன்படுத்தி திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மழைகாலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் வெளியேற்ற பொக்லைன் போன்ற எந்திரங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் போடி தாசில்தார் செந்தில் முருகன், வருவாய் ஆய்வாளர் முத்து நவரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் நெப்போலியன், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story