புகையிலை பொருட்களை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


புகையிலை பொருட்களை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Sept 2021 10:50 PM IST (Updated: 25 Sept 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்களை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட திருக்கோவிலூர் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ராஜா(வயது 42) என்பவரை திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ராஜா தொடர்ந்து புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜாவை கைது செய்தனர். இந்த உத்தரவை சிறையில் இருக்கும் ராஜாவிடம் போலீசார் தெரிவித்தனர்.


Next Story