ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளர் பணியிடை நீக்கம்


ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Sep 2021 5:20 PM GMT (Updated: 25 Sep 2021 5:20 PM GMT)

ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே கிளியனூர் பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசி, 300 கிலோ கோதுமை மூட்டைகளை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக எடச்சேரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் வானூர் தாலுகா கிளியனூர் அருகே ராமலிங்கம்பேட்டையை சேர்ந்த ஏழுமலை (வயது 57) , கிளியனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வீரமணி (48) , தேற்குணம் சாலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான சீனிவாசன் (38) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் ஏழுமலை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிரபு உத்தரவிட்டுள்ளார்.




Next Story