தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 25 Sept 2021 11:40 PM IST (Updated: 25 Sept 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

தூர்வார வேண்டும் 
மிடாலம் ஊராட்சிக்கு உட்பட்ட பறம்பு விளையில் பறம்பு குளம் உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் பாசிகளால் நிரம்பி காணப்படுகிறது. இதில் வளர்ந்த நீர்தாவரங்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த தண்ணீரை மக்களால் பயன்படுத்த முடியவில்லை. எனவே குளத்தை தூர்வாரி அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உதவ வேண்டும்.
                                                   -சி.விஜயகுமார், பாரக்கன்விளை.
பெயர் பலகை தேவை
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வளவு முக்கியமான கன்னியாகுமரி வடக்கு குண்டலுக்கு செல்லும் சாலையில் பெயர் பலகை சேதமடைந்து காணப்படுகிறது. வெளியூரில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமலும், சரியான முகவரிக்கு சென்றடைய முடியாமலும் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சாலையின் முகப்பு பகுதியில் சேதமடைந்த பெயர் பலகையை அகற்றி, புதிய பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
                                                                         -வி.தாணு, கொட்டாரம்.
சேதமடைந்த சாலை 
நாகர்கோவில் கிழக்கு கோணம் மூவேந்தர் நகரில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், மழை நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதுபற்றி புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                  -அரசுமணி, சேனாப்பள்ளி.
புதிய மின் விளக்கு அமைக்க வேண்டும் 
ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏலாகரையில் உள்ள தெருவிளக்கு சேதமடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்விளக்கை மாற்றி, புதிய மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                             -செல்வராஜ், நித்திரவிளை.
சீரமைக்க வேண்டிய சாலை
கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் முதல் சூசைபுரம் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -ஜாக்சன் ஜாண்சன், கொல்லங்கோடு.
தொற்று நோய் பரவும் அபாயம்
இறச்சகுளம் ஜங்ஷன் பாலமோர் ரோட்டில் ஓட்டல் முன்பு உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவு பொருட்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஓடையில் குவிந்து கிடக்கும் கழிவு பொருட்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                        -குமார் இறச்சகுளம்.
ஆபத்தான மின்கம்பம்
கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு அஞ்சலி பகுதியில் மின்கம்பம் உள்ளது. மிக பழமையான இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பம் எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                      -கிளாட்ஸ்டன், அஞ்சலி.

Next Story