திருவண்ணாமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


திருவண்ணாமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 25 Sept 2021 11:55 PM IST (Updated: 25 Sept 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 1,100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது. 

முகாமிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் 8&ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வி தகுதியுடையவர்கள் என 1,144 பேர் கலந்துகொண்டனர்.

இதில் 18-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்து, தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வி தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்தனர். 

சிறப்பு அழைப்பாளராக சென்னை மண்டல வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணை இயக்குனர் சந்திரன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, தனியார் துறை நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 382 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் மோகன்ராஜ், வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story