உள்ளாட்சி தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு
வாலாஜாவில் உளளாட்சி தேர்தல் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டுகளை இறுதி வேட்பாளர் பட்டியல் நிறைவு பெற்றவுடன் அச்சடிக்க வைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வேட்பாளர் பட்டியல் பதிவேற்றம் செய்வதையும் அவர் ஆய்வு செய்தார்.
அதேபோல வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் நடைபெற்று வருவதையும், வாக்காளர் துணை பட்டியல் இறுதி செய்யும் பணிகள் நடைபெறுவதையும் கணினியில் பதிவேற்றம் நடைபெறுவதையும் அவர் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story