வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2021 12:37 AM IST (Updated: 26 Sept 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளம் மயிலாடும்பாறை காலனியை சேர்ந்தவர் பிரம்மராஜ் மகன் ரமேஷ் (வயது 20). கோவையில் தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு ரமேஷின் பெற்றோர்கள், முதலில் நிரந்தரமாக ஒரு வேலையை பார்த்துக் கொள்ளுமாறும், பின்னர் திருமணத்தை பற்றி பேசலாம் எனவும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story