ஆக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு


ஆக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 26 Sept 2021 12:41 AM IST (Updated: 26 Sept 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு நடந்தது.

நெல்லை:
நெல்லை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சீனியர் பெண்கள் மற்றும் ஜூனியர் ஆண்களுக்கான ஆக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் பீர் அலி, மூத்த துணை தலைவர் ஞானசிகாமணி, பொருளாளர் சார்லஸ், தேசிய ஆக்கி நடுவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் ஆக்னஸ் பிரின்சி, ஹமர் நிஷா, உடற்கல்வி ஆசிரியை கவிதா, இந்துமதி, ஆக்கி பயிற்றுனர் ரவீந்தர், ராஜபிரபாகரன், ஜான்சன் ஆகியோர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.

Next Story