வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் - ரூ.25 ஆயிரம் கொள்ளை
திருவாரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். கைவரிசை காட்டிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். கைவரிசை காட்டிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
திருவாரூரை அடுத்த புலிவலம் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 50) இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். செல்வகுமார் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். தமிழ்ச்செல்வி தனது இரண்டாவது மகன் மற்றும் செல்வகுமாரின் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
செல்வகுமாரின் பெற்றோர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டனர். நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தனது மகனுடன் நாகப்பட்டினம் சென்று விட்டார்.
20 பவுன் நகைகள் - ரூ.25 ஆயிரம் கொள்ளை
நேற்று காலை தமிழ்ச்செல்வி தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் மற்றும் வெ்ள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ள பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருவதுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story