மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி தற்கொலை + "||" + Nursing student commits suicide

நர்சிங் மாணவி தற்கொலை

நர்சிங் மாணவி தற்கொலை
செங்கோட்டை அருகே நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மகள் பவித்ரா (வயது 22). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் 3&ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண் விழித்து பார்த்த பெற்றோர் தங்களுடைய மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், செங்கோட்டை போலீசார் விரைந்து சென்று,  பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குப்பதிவு செய்தார். மாணவி பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
2. டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தற்கொலை
மதுரையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
முக்கூடல் அருகே, வளர்ப்பு மகனால் விரக்தி அடைந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டனர்.
4. ஓட்டல் தொழிலாளி தற்கொலை
மூலைக்கரைப்பட்டி அருகே ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5. கர்ப்பிணி மனைவியுடன் தொழிலாளி தற்கொலை
திருமணமான 6 மாதத்தில், கர்ப்பிணி மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.