பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்


பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்
x
தினத்தந்தி 26 Sept 2021 3:13 AM IST (Updated: 26 Sept 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

பிச்சைக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தார்வார்: ‘எக் ரைஸ்‘ கொடுப்பதாக கூறி அழைத்து சென்று ஆதரவற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாலியல் பலாத்காரம்

தார்வார் மாவட்டம் அன்னிகேரி தாலுகா ஹள்ளிகேரி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா (வயது 21). அதேப்பகுதியில் ஆதரவற்ற குடும்பத்தினர் பிச்சை எடுத்து வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளாள். இந்த நிலையில் சரணப்பா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த சிறுமி, சரணப்பாவிடம் பிச்சை கேட்டுள்ளாள். அந்த சமயத்தில் சரணப்பா, அந்த சிறுமிக்கு ‘எக் ரைஸ்‘ கொடுப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி தனது வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். 

அப்போது அங்கு வைத்து சிறுமியை சரணப்பா வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சரணப்பா மிரட்டி உள்ளார். 

வாலிபர் கைது

ஆனாலும் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைப்பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தார்வார் புறநகர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், சிறுமிக்கு தார்வார் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சரணப்பாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story