மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை + "||" + mother torture her son with her illegal lover

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்த தாய், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்த தாய், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். 

கள்ளக்காதல்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் அரிசிகெரே ரோட்டில் வசித்து வருபவர் வசந்தா (வயது 38). இவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனுடன் வசந்தா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வசந்தாவுக்கும் அதேப்பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வசந்தா தனியாக வசித்து வந்ததால் அவருடைய வீட்டுக்கு யோகேஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும் அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். 

இதனால் அவர்கள் நெருங்கி பழகி வந்தனர். மேலும் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

சிறுவனுக்கு சித்ரவதை

இந்த நிலையில், யோகேஷ்-வசந்தாவின் கள்ளக்காதலுக்கு வசந்தாவின் 8 வயது மகன் இடையூறாக இருந்ததாக தெரிகிறது. இதனால் வசந்தா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடிக்கடி மகனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். யோகேஷ் வீட்டுக்கு வரும் போதெல்லாம், சிறுவனை அவர்கள் வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சிறுவனின் உடலில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். 

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சிறுவனை அவர்கள் சித்ரவதை செய்யும் சம்பவம் பற்றி குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரங்கநாத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து ரங்கநாத் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று கள்ளக்காதல் ஜோடியிடம் இருந்து சிறுவனை மீட்டனர். 

2 பேர் கைது

பின்னர் அவர்கள் அந்த சிறுவனை, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரங்கநாத், கடூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை சித்ரவதை செய்ததாக வசந்தா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் யோகேஷ் ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.