சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் கையிருப்பு - வேளாண் அதிகாரி தகவல்


சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் கையிருப்பு - வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2021 2:25 PM IST (Updated: 26 Sept 2021 2:25 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சம்பத்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் யூரியா 1044 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 443 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 494 மெட்ரிக் டன்கள், சூப்பர் பாஸ்பேட் 380 மெட்ரிக் டன்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் 4413 மெட்ரிக் டன்கள் தற்போது கையிருப்பில் உள்ளது.

மேலும் சில நாட்களில் நிறுவனங்கள் மூலம் சுமார் ஆயிரம் டன் யூரியா வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுடைய தேவைக்கு ஏற்றபடி ஆதார் அட்டையை பயன்படுத்தி உரங்களை பெற்றுக் கொள்ளலாம். தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் உரம் வாங்கும்போது உரிய ரசீது பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

மேலும் விவசாயிகள் உரம் வாங்கும் போது அவர்களின் பயிருக்குத் தேவையான உரங்களை மட்டுமே விற்பனையாளர்கள் வழங்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு உர விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் வேளாண்மை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது முறைகேடு கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாடு சட்டம் 1985 இன் படி உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Next Story