கும்மிடிப்பூண்டி பஜார் நடைபாதையில் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கும் மின்கம்பம்


கும்மிடிப்பூண்டி பஜார் நடைபாதையில் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கும் மின்கம்பம்
x
தினத்தந்தி 26 Sept 2021 3:21 PM IST (Updated: 26 Sept 2021 3:21 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி பஜார் நடைபாதையில் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியின் பஜார் பகுதியாக ஜி.என்.டி.சாலை இருந்து வருகிறது. போக்குவரத்து, கடைகள், பொதுமக்களின் நடமாட்டம் என மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியாக இந்த ஜி.என்.டி. சாலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டே ஜி.என்.டி. சாலையில் நடைபாதை மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு ஏற்ப விரிவாக்க பணிகளும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று உள்ள நிலையில் பழைய மின்கம்பங்கள் அனைத்தும் விரிவாக்கத்திற்கு ஏற்ப கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலையோரம் புதிதாக இடம் மாற்றி அமைக்கப்பட்டன.

ஆனால் அங்குள்ள ஒரு மின்கம்பம் மட்டும் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்த நிலையிலும் பழைய நடைபாதையின் நடுவிலேயே ஒரு பக்கமாக சாய்ந்தவாறு காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பத்தில் உயர் மின் அழுத்த வயர்களின் இணைப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள மற்ற மின்கம்பங்கள் அனைத்தும் ஒரே சீராக மாற்றி அமைக்கப்பட்ட விரிவாக்க சாலையையொட்டி அமைக்கப்பட்டு உள்ள நிலையில் உயர் மின் அழுத்த வயர்களுடன் சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் மட்டும் பொதுமக்களை அச்சம் கொள்ள வைக்கிறது. விரிவாக்கப்பணிகளுக்கு பிறகு சாலையோரம் நிலையாக அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்களில் இருந்து இந்த மின் கம்பத்திற்கு வயர்கள் இழுத்து கட்டப்பட்டு இருப்பதே இந்த மின்கம்பம் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதற்கான காரணம் ஆகும். நடைபாதையின் மத்தியில் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை மற்ற மின்கம்பங்களை போல சாலையோரத்தில் நேராக மாற்றி பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்பதே கும்மிடிப்பூண்டி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story