வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியரை தரக்குறைவாக பேசியதாக கூறி வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூங்கா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்டலூர்,
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியராக பால்ராஜ் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசிய கூறி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பால்ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்காலிக ஊழியர் பால்ராஜ்குமாரை தரக்குறைவாக பேசிய வனத்துறை அதிகாரி கோபக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் அலுவலகம் முன்பு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story