தூத்துக்குடியில் செல்லப்பிராணிகள் கண்காட்சி
தூத்துக்குடியில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி வட்டக்கோவில் அருகே செல்லப்பிராணிகள் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி பகுதியில் மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் தங்கள் செல்லபிராணிகளை ஆர்வமாக கொண்டு வந்திருந்தனர். இந்த கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்டு, பொமேரியன், லேபர், புல்டாக், கோர்டன் ரெட்ரிவர், பக், டோ பேர்மன், ராட்வீலர், டாக் ஹசன்ட், பாக்சர், சிப்பிப்பாறை ஆகிய வகைகளை சேர்ந்த நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. உரிமையாளர்களின் சொல்படி வளர்ப்பு பிராணிகள் செயல்பட்டதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் ஏராளமான செல்லப்பிராணிகள் பங்கேற்றன.
Related Tags :
Next Story