மாவட்ட செய்திகள்

சென்னையில் 35 இடங்களில் வருமானவரி சோதனை ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு + "||" + Income tax audit at 35 places in Chennai Rs 300 crore tax evasion detection

சென்னையில் 35 இடங்களில் வருமானவரி சோதனை ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னையில் 35 இடங்களில் வருமானவரி சோதனை ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
சென்னையில் 35 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்ததுடன், கணக்கில் காட்டாத ரூ.9 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை,

சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் நிதி நிறுவனம் நடத்துவோரிடம் ஹவாலா பணப் புழக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

அந்த புகார்களின் அடிப்படையில், சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வருபவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடையவர்களின் 35 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் கடந்த 23-ந்தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் வருமானவரி துறையிடம் சிக்கி உள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள வருமானவரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


நிதி நிறுவனங்கள்

சென்னையில் இயங்கி வரும் 2 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னையிலுள்ள 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அந்த 2 நிதி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்பட்ட வரையறையைத் தாண்டி பெறும் வட்டிப் பணத்தின் மூலம் சுமார் ரூ.300 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாயை ஈட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைத் தாண்டி வெவ்வேறு பெயர்களின் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அதில் வாடிக்கையாளர்களை வட்டி செலுத்த வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இரு நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை
சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை.
2. விபசாரம் நடப்பதாக புகார்: 151 ‘மசாஜ் கிளப்'புகளில் போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் 151 ‘மசாஜ் கிளப்’புகளில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
3. குரங்குகளை பிடித்து ‘கோவேக்சின்’ தடுப்பூசி சோதனை நடத்திய கதை: சுவாரசியமான தகவல்கள்
குரங்குகளை பிடித்து வந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசி சோதனை நடத்திய சுவாரசியமான தகவல்கள் குறித்து புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
4. ரூ.300 கோடி வரி ஏய்ப்பு: கால்நடை தீவன நிறுவனத்தில் ரூ.3¼ கோடி பறிமுதல்
தமிழகத்தில் கால்நடை தீவனங்கள், கோழி இறைச்சி உற்பத்தி செய்யும் நிறுவனம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், ரூ.3¼ கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்து உள்ளது.
5. பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை
ஈரோட்டில் பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.