கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே ஒரு பெட்ரோல் பங்க் அருகே காங்கேயம் தாசில்தார் சிவகாமி வந்து கொண்டிருந்தார். அப்போது கற்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த லாரியில் கற்கள் ஏற்றி வர முறையான ஆவணங்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து கற்களுடன் அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் லாரி உரிமையாளர் செந்தில்குமார் மீதும் மற்றும் தப்பி ஓடிய லாரி டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தார் சிவகாமி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story