இருசக்கர வாகன பேரணி
தாராபுரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக இருசக்கர வாகன பேரணி நடந்தது.
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக இருசக்கர வாகன பேரணி நடந்தது.
குற்ற தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் சட்டம்& ஒழுங்கை பாதுகாக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாநகர், புறநகர், தாராபுரம் காங்கேயம்வெள்ளகோவில் உடுமலை மடத்துக்குளம்பல்லடம் அவினாசி மூலனூர் குண்டடம் பகுதியில் சோதனை நடத்தப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக, தாராபுரம் முழுவதும் வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வங்கிகள் ஏ.டி.எம். மையங்கள் நிதி நிறுவனங்கள் நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரவுடிகள் கைது
ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும், வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு சசாய் சாங் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தாராபுரம், மூலனூர், அலங்கியம், குண்டடம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், சந்தேக நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தாராபுரம் காவல் நிலையம் முன்பு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஹெல்மெட் அணிந்து இருந்தனர்
பேரணி புதுக்காவல் நிலைய வீதியில் தொடங்கி பெரியகடைவீதி, பூக்கடை கார்னர், டி.எ.ஸ்.கார்னர் சோளக்கடைவீதி ஐந்து சாலை சந்திப்பு பொள்ளாச்சி ரோடு, புதிய பஸ் நிலையம், உடுமலை ரவுண்டானா சாலை, அலங்கியம் ரவுண்டானா சாலை, வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தனர். அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் ரவுடிகள் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் இந்த இரு சக்கர அணிவகுப்பு பேரணியில் போலீசார் முக கவசம் அணிந்து ஹெல்மெட் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றி எடுத்துரைத்தனர்.
Related Tags :
Next Story